விபத்தை பார்வையிட சென்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி

Date:

பதுளையிலிருந்து கொழும்பிற்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பஸ் விபத்தானது உடுவர 7 ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தோரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அங்கு விபத்தை பார்வையிடச்சென்றிருந்த பெண் ஒருவரையும் சேர்த்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தெமோதர பிரதேசத்தை சேர்ந்த நடுத்தர வயதையுடைய பெணணொருவரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்,  சம்பவத்தினத்தன்று காலையில் வீட்டுக்கு பொருள் கொள்வனவு செய்ய சென்ற வேளையில் விபத்து தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடதிற்கு சென்றுள்ளார்.

அதன்போதே அவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் விபத்தை பார்க்கச்சென்;ற சந்தர்ப்பத்தில் விபத்தில் காயமடைந்தோரை அம்பியுலன்ஸில் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் பணிகள் அவசரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்ததுடன், காயமடைந்தோரை பார்த்து கவலையில் நின்றுகொண்டிருந்த இவரையும் காயமடைந்தவர் என எண்ணி அம்பியுலன்ஸில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு சென்றதன் பின்னர், வெளிநோயாளர் பிரிவில் இருந்த பணியாளர்கள் இவரை விசாரித்துள்ளாhர்கள்.

அதன்போது, தனக்கு நடந்த சம்பவத்தை அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து அங்கிருந்த சிலர் பணம் வழங்கி மீண்டும் தெமோதரை பிரதேசத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...