ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் மூன்று மரணங்கள்!

Date:

உலக நீரில் மூழ்கும் தடுப்பு தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகிறது.

நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர்கள்  மேலும் சுட்டிக்காட்டியதாவது, வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது.

இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

அவற்றில் சுமார் 10 சதவீதம் பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் நீரில் மூழ்கி அதிகமாக பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் வருடாந்தம் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாம் இது குறித்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

சுகாதார அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பிரதானி, விசேட வைத்தியர் எஸ் சிறிதுங்க,

“இலங்கையில் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்களுக்கு குறைந்தது 03 பேர் நீரில் மூழ்கி இறப்பதை நாம் காண்கிறோம். இலங்கையின் போக்கின் படி, 20 வயதுக்கு மேற்பட்ட முதியோர் குழுவே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.”

களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ். லியனகே,

“நீரில் மூழ்கும் நபரை கையால் பிடிக்காதீர்கள்… உரிய உயிர் பாதுகாப்பு பயிற்சி பெறாத வரை.”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...