முட்டையின் கட்டுப்பாட்டு விலையை நீக்கி வர்த்தமானி வௌியீடு

Date:

நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாயாகவும், பழுப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு, வர்த்தக அமைச்சு வர்த்தமானியை வெளியிட்டிருந்தது.

வெள்ளை முட்டை ஒரு கிலோகிராம் 880 ரூபாவிற்கும், பழுப்பு நிற முட்டைகள் ஒரு கிலோகிராம் 920 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் சந்தையின் கட்டுப்பாட்டு விலையில் முட்டை விற்பனை முறையாக நடைபெறாததால் முட்டை தட்டுப்பாடும் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சதொச நிறுவனத்தினால் ஒரு முட்டை 35 ரூபாவிற்கும், பல்பொருள் அங்காடிகளில் இருந்து ஒரு முட்டை 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதன் காரணமாக முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் மூலம் ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று எரிவாயு விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு பிரவேசித்த லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் அங்கு வந்திருந்த குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...