அமெரிக்காவில் 10 மாகாணங்களை தாக்கிய சூறாவளி

Date:

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உட்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியுள்ளது.

பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் 10 இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

புயல் தொடர்பாக தேசிய வானிலை மையம் தெரிவிக்கையில் ,

சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

வோஷிங்டன்-பால்டி மோர் பிராந்தியம், புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தது.மேலும் இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...