லங்கா பிரீமியர் லீக்கில் மீண்டும் பாம்பு: நூலிலையில் தப்பிய வீரர்- வைரலாகும் வீடியோ

Date:

இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கண்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து ஆடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 எடுத்தது.

இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் யாழ்ப்பாணம் சேசிங் செய்த போது கண்டி அணியை சேர்ந்த நட்சத்திர பவுலர் இசுறு உடானா ஃபீல்டிங் செய்வதற்காக தனது அணி கேப்டன் சொன்ன இடத்தை நோக்கி திரும்பி பார்க்காமல் பின்வாக்கில் நடந்த சென்றார். அப்போது திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு அவரது அருகே சென்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் பின்னோக்கி நடந்து சென்ற அவர் திடீரென்று கிழே பார்க்கும் போது சில அடி தூரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து ஷாக் ஆனார். உறைந்து போய் தலையில் கை வைத்து பின்னர் வாயில் கை வைத்து அப்படியே மைதானத்தில் அமர்ந்தார்.

இருப்பினும் தாமதிக்காமல் உடனடியாக அங்கிருந்து எழுந்த அவர் பாம்பு அதனுடைய ரூட்டில் விட்டு எந்த தொந்தரவும் செய்யாமல் மீண்டும் பின்னோக்கி நடந்து ஃபீல்டிங் செய்வதற்காக சென்றார். அதைத்தொடர்ந்து மெதுவாக அங்கிருந்து சென்ற பாம்பு மைதானத்திற்கு வெளியே சென்றதால் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...