நீட் தேர்வில் தோல்வியுற்ற மகன் தற்கொலை – சோகத்திலிருந்த தந்தையும் உயிரிழப்பு

Date:

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை – குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்த செல்வசேகர் என்பரின் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்நிலையில் மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் செல்வசேகர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2021-ல் 12 ஆம் வகுப்பு முடித்த ஜெகதீஸ்வரன், மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சியும் பெற்றுள்ளார்.

எனினும் இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவிய காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். மகனின் மரணத்தை அடுத்து நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என செல்வசேகர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....