ஹவாயில் காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

Date:

அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த தீவுக்கூட்டங்களின் 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது.

இந்த தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது.

இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....