இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..?

Date:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டின. முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 6 அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிசுற்றில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பாக வெளியேற்றுதல் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 8-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே (6 அரைசதத்துடன் 585 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (504 ரன்) பேட்டிங்கில் ஆணிவேராக திகழ்கிறார்கள். இவர்கள் அமைத்து தரும் தொடக்கத்தை பொறுத்தே ஸ்கோர் அமையும். எனவே முக்கியமான இந்த ஆட்டத்தில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையில் ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி ஓரளவு பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஜடேஜா (17 விக்கெட்), துஷர் தேஷ்பாண்டே (20 விக்கெட்), ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் பதிரானா (15 விக்கெட்) வலு சேர்க்கிறார்கள்.

உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு சாதகமான விஷயமாகும். இந்த ஆண்டில் இங்கு ஆடியுள்ள 7 ஆட்டங்களில் 4-ல் சென்னை வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்த சீசனில் சொந்த ஊரில் டோனி படையினர் விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, விசில் சத்தத்தால் மைதானம் குலுங்கப்போகிறது.

சென்னையுடன் ஒப்பிடும் போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சின் கை சற்று ஓங்கியே நிற்கிறது. 10 வெற்றி, 4 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த குஜராத் அணி, லீக்கில் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நினைவிருக்கலாம். இதே போல் கடந்த ஆண்டில் 2 முறை சென்னையை தோற்கடித்தது. அதாவது சென்னை அணி இதுவரை குஜராத்தை சாய்த்தது கிடையாது.

குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் (2 சதத்துடன் 680 ரன்), டேவிட் மில்லர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான் சஹா, விஜய் சங்கர் மற்றும் பவுலர்கள் ரஷித்கான் (24 விக்கெட்), முகமது ஷமி (24 விக்கெட்), நூர் அகமது என்று மெகா நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் கைகொடுப்பது தான் அந்த அணியின் ஸ்பெஷல். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சூப்பர் பலத்துடன் வலம் வருவதால் சென்னை அணிக்கு நிச்சயம் கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய ஆட்டத்தில் குஜராத்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி 10-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ேடானி (கேப்டன்), தீபக் சாஹர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, பதிரானா.

குஜராத்: சுப்மன் கில், விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷனகா, ராகுல் திவேதியா, ரஷித்கான், யாஷ் தயாள், முகமது ஷமி, நூர் அகமது, மொகித் ஷர்மா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓடிடியில் தங்கலான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாதது ஏன்..?

தி கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கலான் ரிலீசான நிலையில் ஓடிடியில் வெளியாக...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ள...

மீண்டும் பியூமியிடம் வாக்குமூலம் பதிவு!

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும்...

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...