பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினர் பெயரில் வங்கியில் கடன் பெறுவதற்காக சக்கரநாற்காலியில் அமரவைத்து அழைத்து வந்துள்ளார்.
அந்தப் பெண் 68 வயது ஆணின் மருமகள் எனக் கூறி, அவரது பெயரில் 17,000 ரைஸ் (சுமார் $3,250) கடனாகப் பெற முயன்றார்.
அந்த நபர், சக்கரநாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், கையெழுத்துப் போடும்போது மரணமடைந்தது போல வங்கி ஊழியர்கள் கருதினர்.
Brazilian woman takes uncle's corpse to a bank and tries to take a loan on his name pic.twitter.com/FV70dlWzkf
— Restricted Vids (@RestrictedVids) April 17, 2024
இதையடுத்து, ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர்.
அவர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர்.
உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபர் எப்படி, எப்போது இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.