படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா- ரசிகர்கள் அதிர்ச்சி!

Date:

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.

அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’, ‘மெர்சல்’ போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

புஷ்பா படத்திற்கு பிறகு, சமந்தா ‘மயோசிட்டிஸ்’ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

சினிமாவில் இருந்து விலகி அவ்வபோது சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.

இந்த நிலையில், உடல் ரீதியாக தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:-

நான் ‘குஷி’ படத்தை முடித்து விட்டு ‘சிட்டாடல்’ தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இப்படத்தில் மிகவும் உடல் ரீதியானதாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதனால் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு அதிரடி காட்சி யில் மூளை அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...

#சூர்யா 44 படத்தில் நடிக்க விருப்பமா?

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை...

12 ஆண்டு சோக கதை: முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...