குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே

Date:

ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் ஆகியோர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் இறங்கினார். சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது (21) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ரன்னில் நடையைக் கட்டினர்.

பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...

#சூர்யா 44 படத்தில் நடிக்க விருப்பமா?

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை...

12 ஆண்டு சோக கதை: முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...