4வது இடத்தை பிடிக்க நாக் அவுட்டில் மோதும் சிஎஸ்கே – ஆர்சிபி.. குறுக்கே வரும் மழை.. 80% வெற்றி யாருக்கு?

Date:

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் தகுதி பெறுவதற்கான போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் கொல்கத்தா ஏற்கனவே முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற விட்டது. அதே போல பஞ்சாப், மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஏற்கனவே லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறி விட்டன. அந்த நிலையில் மே 14ஆம் தேதி நடைபெற்ற 64வது லீக் போட்டியில் லக்னோவை 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது.

அதனால் 13 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த லக்னோ தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாலும் 99% லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. ஆனால் வெற்றி பெற்ற டெல்லி அணி தங்களுடைய 14 போட்டிகளில் முடிவில் 7 வெற்றியை மட்டுமே பதிவு செய்து சென்னை (+0.528) மற்றும் ஹைதராபாத்தை (+0.406) விட குறைந்த ரன் ரேட்டை (-0.377) கொண்டுள்ளது.

சென்னை – பெங்களூரு:
தற்போதைய நிலைமையில் ஹைதராபாத் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமிருக்கிறது. எனவே அந்த 2 போட்டிகளிலும் சேர்த்து ஹைதராபாத் 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தால் மட்டுமே டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். மறுபுறம் ஹைதெராபாத் 2இல் 1 வெற்றி பெற்றாலும் அல்லது 2 போட்டியிலும் சிறிய தோல்வியை சந்தித்தாலும் 3வது அணியாக பிளே ஆஃப் செல்வதற்கு 90% பிரகாச வாய்ப்புள்ளது.

அதனால் லக்னோவை போலவே டெல்லி அணியும் லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. அந்த வகையில் மீதமிருக்கும் 4வது இடத்தை பிடிக்க சென்னை மற்றும் பெங்களூரு அணியிடம் போட்டி காணப்படுகிறது. அதில் சென்னை இதுவரை 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் பெங்களூரு 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் இருக்கிறது.

எனவே தற்சமயத்தில் சென்னை அணிக்கு பிளே ஆஃப் செல்ல 80% வாய்ப்பும் ஆர்சிபி அணிக்கு 25% வாய்ப்பும் உள்ளது. இந்த சூழ்நிலையில் மே 18ஆம் தேதி நடைபெறும் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில் பெங்களூரு பிளே ஆஃப் செல்ல வேண்டுமெனில் சிஎஸ்கே அணியை குறைந்தது 18+ ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் அல்லது சிஎஸ்கே கொடுக்கும் இலக்கை 18.1 ஓவரில் சேசிங் செய்ய வேண்டும்.

ஒருவேளை பெங்களூரு அணி அப்போட்டியில் 17 ரன்கள் வித்தியாசம் அல்லது 18.2 ஓவரில் சேசிங் செய்து வென்றால் கூட ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே மே 18ஆம் தேதி பெங்களூருவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. ஒருவேளை மழையால் அப்போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தால் சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...