தென் அமெரிக்க நாடான சிலியில் 7.3 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று காலை 7.20க்கு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிலி நாட்டின் கடலோர நகரமான அன்டோஃபாகஸ்டாவில் இருந்து கிழக்கே 128 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லைச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.