20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில் ‘குரூப் 1’ பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி ஆப்கானிஸ்தான் (47 ரன்), வங்காளதேசம் (50 ரன்) அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
இந்திய அணி தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் மோசமாக தோற்கக் கூடாது. இந்த நிலைமை நடைபெறாமல் இருக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது நல்லதாகும்.
இதே பிரிவில் நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. ‘குரூப் 1’-ல் இந்தியா 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் உள்ளது. வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.