ஐ.பி.எல். 2024 தொடரில் குறைந்த பட்ச ஸ்கோர் – 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குஜராத் அணி

Date:

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...

‘சண்டையில் சாவுறதுதான் வீரம்ன்னு சொல்லி இருக்காங்க’ – அதிரடியான ‘ரசவாதி’ டிரைலர்

'மெளனகுரு', 'மகாமுனி' படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர்...

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடர்: சாஹிப் அல் ஹசன், முஸ்தாபிஜூர் ரஹ்மானுக்கு இடமில்லை

ஜிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக...