எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக் கூடாது.. ரோகித் சர்மாவை ஓடவிட்டு பழிவாங்கிய ஹர்திக்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை அவமானப்படுத்தியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் களம் இறங்கியது.

இதில் ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா சாதாரண வீரராக களம் இறங்கினார். ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவிட்டு பிறகு குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை நடப்பு சீசனுக்காக மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாக இருக்கிறார்.

இது மும்பை அணி ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மாவை கட்டி அணைத்து வரவேற்றாலும், இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மாவை அவமானப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா செய்த காரியம் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக சீனியர் வீரர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களை இளம் வீரர்கள் 30 மீட்டர் இன்னர் சர்க்கிலில் நிற்க வைப்பார்கள். இதற்கு காரணம் பவுலர்கள் தவறு செய்தால் முன்னாள் கேப்டன்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். மேலும் சீனியர் வீரர்கள் மற்றும் வயதில் மூத்த வீரர்கள் களத்தில் ஒரே இடத்தில் நிற்கவைக்கப்படுவார்கள். இளம் வீரர்களை தான் கேப்டன்கள் எப்போதுமே இடத்தை மாற்றி மாற்றி நிறுத்தி வைப்பார்கள்.

உதாரணத்திற்கு சச்சின், டிராவிட் லக்ஷ்மன் போன்ற சீனியர் வீரர்களை தோனி தலைமை தாங்கும் போது அவர்களை ஸ்லிப் அல்லது ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பார். ஆனால் தற்போது கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை ஒவ்வொரு பந்துக்கும் அங்கும் இங்கும் அலைக்கழித்து வெறுப்பேற்றினார்.

பவுண்டரி எல்லைக்கோட்டின் நில்லுங்கள். அங்கே சொல்லுங்கள்! இங்கே சொல்லுங்கள்! என்று ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா அங்கு எங்கும் மாற்றினார். ரோகித் சர்மாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி 37 வயதாக போகிறது. இப்படி சீனியர் வீரரை அங்கேயும் இங்கேயும் ஹர்திக் பாண்டியா மாற்றியது ரோகித் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு முன்னாள் கேப்டனையும் இளம் வீரர்களை இப்படி அவமானப்படுத்தியதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...