மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம்: அரசுக்கு பரிந்துரை

Date:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கட்டுமானப்பணியில் ‘எய்ம்ஸ்’ நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகள்:

* கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைக்கவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்.

* மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், தரமான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும்.

* மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

* எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்ய வசதிகள் ஏற்படுத்துதல், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...