தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

Date:

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து, 7 ‘சிக்கன் ரைஸ்’ பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓடிடியில் தங்கலான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாதது ஏன்..?

தி கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கலான் ரிலீசான நிலையில் ஓடிடியில் வெளியாக...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ள...

மீண்டும் பியூமியிடம் வாக்குமூலம் பதிவு!

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும்...

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...