ஐ.பி.எல்.-இல் என்ட்ரி கொடுக்கும் ஷமர் ஜோசப்.. உறுதிப்படுத்திய நிர்வாகம் – எந்த அணி தெரியுமா?

Date:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. அந்த வகையில், ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணி அறிவித்து இருக்கிறது. இவர் இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக லக்னோ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரை முழுமையாக தகர்த்த ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸ்-இல் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக ஷமர் ஜோசப் உலகளவில் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக மாறினார். முதல் முறையாக ஐ.பி.எல்.-இல் களமிறங்கும் ஷமர் ஜோசப்-க்கு லக்னோ அணி சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐ.பி.எல். சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2024 டாடா இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மார்க் வுட்-க்கு மாற்றாக ஷமர் ஜோசப்-ஐ தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர் லக்னோ அணியில் ரூ. 3 கோடி விலையில் இணைகிறார்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...