# Tags

நாட்டில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை

தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கையில் 43 வீதமான […]

விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்!

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன. இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன. எவ்வாறாயினும், வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

எரிபொருள் விலை

ஏப்ரலில் எரிபொருள் விலை குறையும்

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச எரிபொருளுக்கான டோக்கன்கள் விநியோகம்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று கொழும்பு […]

நாடளாவிய ரீதியில் நாளை(01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாளைய தின(01) ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் எரிபொருள், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை […]

ஏப்ரலில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நீக்கப்படாது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, […]