# Tags

ஜனநாயகத்திற்காக போராடும் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்போம்

தேர்தலை நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி நேற்று முன்தினம்(26) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நிவிதிகல நிமல் அமரசிறிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நேற்று (27) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இரங்கல் தெரிவித்தார். தனது அரசியல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள்காணப்படுகின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்க்கட்சியில் செயற்படும் சகோதர அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னனி நேற்று ஏற்பாடு செய்திருந்த […]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல்

தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு […]