# Tags

ஶ்ரீ ரங்கா கைது !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பிலியந்தலை-சுவாரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த நபரின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 27 வயது திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக, கோபமடைந்து தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் களுபோவில […]