# Tags

கல்வி முறையில் மாற்றம்?

கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகள் தமது கல்வி முறையை எதிர்கால தொழில்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ள போதிலும், இலங்கை இன்னும் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.  

சாதாரண தர பரீட்சை குறித்து அறிவிப்பு !

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைவதற்கு இடமுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நடாத்தப்பட்டு நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு கால அவகாசம் கூடுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உயர் தர பரீட்சை பெறுபேறு தாமதமடையும்

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் […]

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசம் தொடர்பில் நடவடிக்கை !

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற […]

கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.