இலங்கையில் அணுமின் நிலையங்களை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவை பரிசீலிக்க தீர்மானம்
இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார். அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது. அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி […]