ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானை வீடியோ காலில் பாராட்டிய தலிபான் அமைச்சர்

Date:

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

அபூட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், “அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை

பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்’ என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ காலில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இம்மாத இறுதிக்குள் தேர்தலுக்கான அறிவிப்பு!

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு...

பல்லி உங்கள் மேல் எந்த இடத்தில் விழுந்தால் அதிஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?

பல்லி நம் உடலில் விழுந்தால் அது அசுபம் என்று பல நம்புகிறார்கள்....

30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்...

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 படம் கடந்த 12ம் தேதி...