‘சண்டையில் சாவுறதுதான் வீரம்ன்னு சொல்லி இருக்காங்க’ – அதிரடியான ‘ரசவாதி’ டிரைலர்

Date:

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து ‘போர்’ என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘ரசவாதி’ என்று தலைப்பிடப்பட்டது.

இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது . படத்தின் டிரெயிலரை திரைத்துறை பிரபலமான லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான், எஸ்.ஆர் பிரபு அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அர்ஜூன் தாஸ் கதாப்பாத்திரத்தின் மூன்று காலக்கட்டத்துடைய வாழ்க்கை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ரசவாதி படத்தின் டிரெயிலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.மௌனகுரு மற்றும் மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...

20 ஓவர் உலக கோப்பை: சூப்பர்-8 முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்...

சென்னை-நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு...

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...