3 சூப்பர் ஓவர்: வரலாற்றில் இடம் பிடித்த மகாராஜா டி20 லீக்

Date:

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மகாராஜா டிராபி என்ற பெயரில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ்- பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் அந்த அணி திணறியபோது மணிஷ் பாண்டே 33 ரன்களும், அனீஷ்வர் கவுதம் 30 ரன்களும் சேர்த்தனர். பெங்களூரு டைகர்ஸ் அணி சார்பில் லாவிஷ் கவுசல் சிறப்பாக பந்து வீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. மயங்க் அகர்வால் 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார். என்ற போதிலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் போட்டி “டை”யில் முடிந்தது.

இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 10 ரன்கள் அடித்தன. இதனால் 2-வது முறை சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. 2-வது முறை இரு அணிகளும் தலா 8 ரன்கள் அடித்தன. இதனால் 3-வது முறை ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

இந்த முறை பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 12 ரன்கள் அடித்தது. ஆனால் ஹூப்ளி அணி இதை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டதா? எனத் தெரியவில்லை. இதனால் இநத் போட்டி வரலாற்றில் இடம் பெறும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...