ஸ்ரேயங்கா பாட்டீல் சுழலில் சுருண்டது டெல்லி.. ஆர்சிபி வெற்றி பெற 114 ரன்கள் வெற்றி இலக்கு

Date:

2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா- மெக் லானிங் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனையடுத்து பிரேக் விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிய டெல்லி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

8-வது ஓவரை வீசிய சோஃபி மோலினக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 44, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, ஆலிஸ் கேப்ஸி 0 என ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்ததால் பொறுப்புடன் ஆடிய மெக் லானிங் 23 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த மரிசான் கேப் 8, ஜெஸ் ஜோனாசென் 3, மின்னு மணி 5, ராதா 12 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

ஆர்சிபி அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...