ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளுக்கு நீதி வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஊதியம் வழங்குவது குறித்தும், அதற்குப் பிறகும் ஊதியம் வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

“தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது, இதன்போது தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் அவர்கள் அறிவிப்பார்கள் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைவரப்படி எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சு தேர்தல் குறித்த எதிர்கால நடவடிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஊடாக அறிவிக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...