Home Blog

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் காஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

 

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் 3வது இடத்தில உள்ளது.

இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் எடுத்து ஹைதராபாத் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சந்தித்துள்ளார்.

 

இது தொடர்பான புகைப்படங்களை ஹைதராபாத் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

#சூர்யா 44 படத்தில் நடிக்க விருப்பமா?

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் நடிக்க காஸ்டிங் கால் போஸ்டரை கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 8 வயது முதல் 80 வயது வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆண் மற்றும் பெண் வரம்பில்லை எனவும் மொழி தடையில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் நடிப்பை பிரதிபலிக்கும் விதமாக 1 முதல் 3 நிமிட வீடியோவை பெயர் மற்றும் பிற விவரங்களை மென்ஷன் செய்து 7550011050 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டள்ளது.

 

12 ஆண்டு சோக கதை: முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

இதனால் இன்றைய போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

 

ஆரம்பமே அதிருத்தே..! அதிரடியோடு வெளியானது தலைவரின் 171-ஆவது பட டைட்டிலான ‘கூலி’ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது .

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடைசியாக ‘லியோ’ படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் நடிக்கும் 171-ஆவது படத்தை இயக்க உள்ள தகவலை உறுதி செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு இன்னும் நின்னிறைவடையாததால், தலைவர் 171-ஆவது படம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் கூலி என்பதை படக்குழு அதிரடியான டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இது லிஸ்டிலேயே இல்லையே

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

செஃப் தாமு நடுவராக பங்கேற்க புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்க உள்ளார். மேலும் ஐந்து புதிய கோமாளிகள் களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படியான நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனமாக நடித்த சுஜிதா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் வடிவுக்கரசி, பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். 2024 – பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்.. 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா 16 ரன்களிலும், டேவிட் வார்னர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய அபிஷேக் பொவெல் 22 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், கேப்டன் ரிஷப் பந்த் நிதானமா ஆடி 44 ரன்களை குவித்தார். இவரும் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நசராஜன் 4 விக்கெட்டுகளையும், மயன்க் மார்கண்டே மற்றும் நிதிஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

நாட்டில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

நாட்டில் சுமார் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.