Home Blog Page 32

கூகுள் தேடல் – கோலியும் இல்லை, ரோகித்-ம் இல்லை.. டாப் 10-இல் ஒரே இந்திய வீரர் யார் தெரியுமா?

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் கூகுள். உலகளவில் 2023 ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் அதிசயிக்கும் வகையில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது அசாத்திய ஃபார்ம் மூலம் இந்திய அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார்.

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் டாப் 10 பட்டியல்:

1 – டமர் ஹேம்லின்

2 – கிலியன் எம்பாப்பே

3 – டிராவிஸ் கெல்ஸ்

4 – ஜா மொரண்ட்

5 – ஹேரி கேன்

6 – நோவக் ஜோகோவிக்

7 – கார்லோஸ் அல்காரஸ்

8 – ரச்சின் ரவீந்திரா

9 – சுப்மன் கில்

10 – கைரி இர்விங்

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அளவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தெதுருஓயா, தப்போவ, வெஹேரலகல, லுணுகம்வேஹேர, மவ்ஆர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவில் பெய்த கடும் மழையினால், கெசெல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததில் பொகவந்தலாவின் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.

தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியா, நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஏழு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் டி காக், மார்கிராம், வான் டெர் டுசன், கிளாசன், மில்லர் வலு சேர்க்கின்றனர். டி காக் களத்தில் நின்று விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற இருப்பதால் அணிக்கு எதாவது செய்து விட்டு செல்ல வேண்டும் என நினைப்பார். டி காக் 4 சதங்களும், வான் டெர் டுசன் 2 சதமும், மார்கிராம், கிளாசன் தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.

பந்து வீச்சில் ரபாடா, யான்சன், நிகிடி என முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மகாராஜா, ஷாம்சி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையுடன் களம் காண்பார்கள்.

ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த பின், ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். லாபஸ்சேன், சுமித் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினால் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது கடினம். வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 சதங்களும், டிராவிஸ் ஹெட் ஒரு சதமும் அடித்துள்ளனர்.

பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் வேகப்பந்து வீச்சில் அசத்துவார்கள். புதுப்பந்தில் ஸ்டார் மாயாஜாலம் காட்டுவார். அதில் தென்ஆப்பிரிக்கா சிக்கினால் அவ்வளவுதான். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜாம்பாதான். இவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்வார்கள்.

இதனால் இரு பெரிய அணிகள் மோத இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை(17-ந்தேதி) தொடங்குகிறது.

இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது.

தொடர்ந்து சன்னிதானத்தில் புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டிமேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்படுகிறார்கள்.

பின்பு இரு மேல்சாந்திகளையும், படியிறங்கும் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி 18-ம் படிவழியாக சன்னிதானத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் இருவரையும் தந்திரி கலசாபிஷேகம் நடத்தி அபிஷேகம் செய்கிறார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்படும்.

நாளை(17-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமையேற்று நடத்துவார். அன்றைய தினம் முதல் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பிறகு மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

பக்தர்கள் வரும் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜைக்காக நாளை(17-ந்தேதி) முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை முதல் டிசம்பர் 27-ந்தேதி வரையிலான 41 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்திலும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவுபெறும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள மலைப்பாதையில் ஏராளமான இடங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என கமல்ஹாசன் இடம் ரெட்கார்ட் காட்டியதால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த சனி ஞாயிறு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ’பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்கள் கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னை பிளேயர் ஆக சேர்க்காதீர்கள் என்றும் நீங்கள் உங்களுக்கு அநியாயம் நடந்ததாக கூறி ரெட் கார்ட் கொடுத்ததால் தான் பிரதீப் வெளியேறினார் என்பதையும் திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாக கூறி பிரதீப் வெளியேற்றத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது தான் மாயா தனது தவறை உணர ஆரம்பித்தது போல் தெரிகிறது. ’பிரதீப் வெளியேற்றம் என்பது நம்மால் தான் நடந்தது என்பது தெரிய வந்தால் வெளியே அவருடைய ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது’ என்று நிக்சனிடம் கூறும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அப்போது நிக்சன் ’வெளியே போய் பிரதீப்பை நேரில் சந்தித்து சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூற அப்போதும் மாயா தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் ’அதெல்லாம் சந்திக்க முடியாது, அவன் என்ன பெரிய இவனா’ என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேக்ஸ்வெல் விளையாடுவார்

உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார்.

விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு (cramps) ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில், நாளைய அரையிறுதி போட்டி குறித்து கம்மின்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “மேக்ஸ்வெல் விளையாட தயாராக உள்ளார். நேற்று அவருக்கு சற்று வலி இருந்தது. அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என தெரிந்து கொள்ள பலமுறை ஸ்கேன் எடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக அமைந்துள்ளது. நாளை டாஸ் சுண்டும்போது ஆடும் லெவன் அறிவிக்கப்படும்” என்றார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இந்தியா

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார்.

முன்னதாக, லதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

45.2 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 28 பந்துக்கு 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் நியூலாந்து அணி இருந்தது.

மிட்செல் சான்ட்னர் மற்றும் சௌதீ ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, சௌதீயுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.

மனவேதனையில் ராஷ்மிகா.. தொடர்ந்து குரல் கொடுக்கும் பிரபலங்கள்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து புஷ்பா- 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா ‘தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது’ என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளதாவது, “‘சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய வலுவான வழக்கு இது’ என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், பாடகி சின்மயி, ‘ராஷ்மிகாவின் டீப் பேக் (deepfake) வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் மனவேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டதை நான் பார்த்தேன். தினமும் பெண்களின் உடல்கள் சுரண்டப்படும் ஒரு நாட்டில், பெண்களை குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் டீப் பேக். சிறுமிகளுக்கு டீப் பேக்கின் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு புகாரளிக்கவும் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

 

 

உலகக் கோப்பை அரையிறுதி: 4-வது இடத்திற்கு நான்கு அணிகளுக்கிடையே கடும் போட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டியுள்ளது.

இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது.

இன்று இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நெதர்லாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தும் விடும்.

ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்றால், கடைசி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். மேலும், அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இந்தியாவையும் வீழ்த்த வேண்டும். இது சாத்தியமற்றது.

நியூசிலாந்து நாளை இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.

ஒருவேளை தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்து, நெதர்லாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதன்பின் ரன்ரேட் அடிப்படையில் நான்கு அணிகளில் ஒன்று அரையிறுதிக்கு முன்னேறும்.

இதே நிலைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும். இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற முனைப்பு காட்டும். இதனால் வரவிருக்கும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

கமல்ஹாசன்- விஜய் சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் விஜய்யும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ‘லியோ’ திரைப்படத்தின் டப்பிங் பணியின் போது எடுத்து கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், ‘லியோ’ படக்குழுவானது லோகேஷ் கனகராஜ், விஜய், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த படமும் வெளியாகியுள்ளது.