அரசு ஊழியர்கள் காலை 7.30-க்கே அலுவலகம் வர வேண்டும்..

Date:

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது நாட்டில் வெயில் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், மின்தேவை உச்சமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நண்பகல் வேளையில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருப்பதால் அப்போது தான் மின்சாரத்தின் பீக் லோட் எனப்படும் உச்சபட்ச தேவை உருவாக்கிறது.

இதை கருத்தில் கொண்டு மின்சார தேவையை சீராக்கும் விதமாக புதிய முன்னெடுப்பை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் மே 2-ம் திகதி தொடங்கி அம்மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 2 மணி வரை இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறையானது ஜூலை 15ஆம் திகதி வரை தொடரும் என உத்தரவில் கூறியுள்ளது. தற்போதைய நிலையில், அரசு அலுவலகங்கள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றன.

வெயில் கால மின்சார தேவையை கருத்தில் கொண்டு மாநில அரசு உயர் அலுவலர்கள், அரசு ஊழியர்கள் தரப்பு பிரதிநிதிகளிடம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் 300இல் இருந்து 350 மெகாவாட் அளவில் மின்சார தேவை குறையும் என முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். அதேபோல, தானும் காலை 7.30 மணிக்கு எல்லாம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...