ஈராக்கில் இன மோதலில் 3 பேர் பலி- ஊரடங்கு அமல்

Date:

ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர்.

இது பயங்கர கலவரமாக வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்கினர்.

இந்த மோதலில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மார்பிலும், ஒருவர் தலையிலும் சுட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணைய இயக்குனர் ஜியாத் கலப் தெரிவித்தார்.

இந்த இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...