உலக புகழ் பெற்ற ராக் இசையின் ராணி டினா டர்னர் மரணம்

Date:

அமெரிக்காவில் பிறந்து சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த, பிரபல பாடகர் தான் டினா டர்னர். அன்ன மே புல்லக் என்ற இயற்பெயரை கொண்ட இவர் ராக் இசையின் ராணி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

கடந்த 1957ஆம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கிய இவர், ஃபூல் ஆப் லவ் என்ற பாடலின் மூலம் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து உலகமெங்குமுள்ள பல நாடுகளில், பாடி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் இவரது பாடல்கள் 100 மில்லியன் அளவிற்கு விற்பனை ஆகியிருக்கிறது, மேலும் ராக் இசையில் தனித்திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார்.

இவர் அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி கென்னடியிடம் ‘ஆண்டின் சிறந்த பெண்’ என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் 83 வயதை நெருங்கிய டினா டர்னர், நீண்ட நாளாக உடல் நல கோளாறால் பாதிக்கப்பட்டு சுவிஸில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவர் நேற்று அகால மரணமடைந்தாக, அவரது அதிகாரப்பூர்வ இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் உலகத்தில் உள்ள இசை பிரபலங்கள் பலரும் இவரது இறப்புக்கு, தங்களது சமுக வலைத்தள பக்கங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது இறப்பிற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ‘இது சோகமான செய்தி’ என தனது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை விட்டுள்ளது.

உலகத்தையே தனது இசையால் கட்டிப்போட்ட பிரபல பாடகி, தான் ஒரு கறுப்பின பெண் என்ற கர்வத்தோடு அவரது குரல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்பது குறிப்பிடதக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...