எரிபொருள் விலையில் மாற்றம்?

Date:

உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான அமெரிக்காவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 2% ஆல் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரென்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 1.17 டொலர்களால் அதிகரிக்கலாம் என்றும், பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 79.54 டொலராக அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.02 டொலர்கள் அதிகரிக்கலாம் எனவும், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 டொலர்களாக அதிகரிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

விலை சூத்திரத்தின்படி, மே மாதத்திற்கான விலை திருத்தம் நாளை (01) மேற்கொள்ளப்பட உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...