எலிகள் மூலம் கொரானா பரவும் அச்சம் : ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

Date:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரானா தொற்று

அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் மூன்று விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 9-ஆம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.

மக்களுக்குப் பரவும் அபாயம்

அமெரிக்காவில் கழிவுநீர் பாதையிலுள்ள எலிகளுக்கு இந்த வகை கொரானா வைரஸ் வர வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது. உயிரியலாளர்கள் 79 எலிகளில் 13 (16.5%), SARS-CoV-2-க்கு நேர்மறை சோதனை செய்ததைக் கண்டறிந்துள்ளனர்.

“எங்கள் கண்டுபிடிப்புகள் எலி மக்கள் தொகையில் SARS-CoV-2 ஐ மேலும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகின்றன, வைரஸ் விலங்குகளில் புழக்கத்தில் உள்ளதா மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனையாக உருவாகிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டத்திலிருக்கிறோம்” என மருத்துவர் வான் கூறியுள்ளார்.

“ஒட்டுமொத்தமாக, இந்த இடத்தில் எங்கள் ஆராய்ச்சி மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்களில் விலங்குகள் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, எனவே மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே இதன் மூலம் பொதுமக்களுக்கு எலிகள் மூலம் கொரானா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...