சாதனை படைத்த இந்திய அணி !

Date:

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா ஆல் ரவுண்டர்களாக முத்திரை பதித்து தொடர் நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர் இதன்மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

அதன் பிறகு உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. அதேபோல, சவால்மிக்க அணிகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா இதே போன்று 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை போட்டுத் தாக்கியிருந்தது. இதில் 2 முறை அவஸ்திரேலிய மண்ணில் படைத்த வரலாற்று சாதனையும் அடங்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...