“சிம்பா”வை காண மக்களுக்கு வாய்ப்பு

Date:

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்து ஐந்து வாரங்களேயான  “சிம்பா” என்ற சிங்கக்குட்டியை தற்போது பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் “சிம்பா” என பெயரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளதாவது,

ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது. பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்கள் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் சிம்பா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சிம்பாவை, தினமும் காலை 09.30முதல் 10.30வரையிலான நேரத்திலும் நண்பகல் 01.30 முதல் 03.30வரை பிரதான உணவகத்தின் முன்பு காணப்படும் இடத்தில் பொதுமக்கள் காணமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...