சீன அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இல்லாவிட்டாலும், சீனாவில் உள்ள நிறுவனமொன்றின் வேண்டுகோளுக்கு இணங்க, குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாததால் அனைவரது கருத்துகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.