செனல் 4 காணொளி தொடர்பிலான சர்வதேச விசாரணை அவசியம்

Date:

செனல் 4 காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதலால் நாட்டு மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்தது.

அதுமாத்திரமின்றி நாட்டின் தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டன.

முஸ்லிம் மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். முஸ்லிம் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வந்தனர். பல பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.

இந்த தாக்குதலை அடுத்து முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே நிலவிய சகோதரத்துவத்தில் விரிசல் ஏற்பட்டது.

எனவே செனல் போ இன்று வெளியிடவுள்ள ஏனைய தகவல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துவெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன், சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என கோரியுள்ளார்.

செனல் 4 காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிவாதிகள் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர்நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேராவினால் இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...