பெற்றோரின் கவனத்திற்கு – அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள்

Date:

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

மேலும் காய்ச்சல் இல்லாவிட்டாலும், அதிக உடல் வெப்பநிலை மற்றும் வியர்வை காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிக உஷ்ணத்தினால் தோல் நோய்களும் ஏற்படக்கூடும் , இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு குழந்தையும் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும் என்றார்.

இக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பிரதேசங்கள் காணப்படுவதாகவும் அவ்வாறான பிரதேசங்களில் கூட குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் எனவும் அசுத்த நீரைக் குடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...