வாட்ஸ்அப் தற்போது ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
இப்படி இருக்கையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் பிரைவேட் சாட்-ஐ லாக் மற்றும் ஹைட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
க்ரூப்-களில் பயனர்களின் மிகமுக்கிய தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும்.
சாட் லாக் செய்தால், அதை கடவுசொல் அல்லது பயனரின் கைரேகை மூலமாகவே பார்க்க முடியும்.
சாட், ஆடியோ சாட், எடிட் மெசேஞ்ச் மற்றும் ஷார்ட் வீடியோ மெசேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன.
மேலும் இவை எதிர்கால அப்டேட்டிலேயே வெளியிடப்பட உள்ளன.
புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.