அரியவன் – விமர்சனம்

Date:

பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பிரச்சினைகளைக் கொண்ட படங்கள் சமீப காலங்களில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. நிஜத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால், அது பற்றிய எச்சரிக்கை உணர்வையும், பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும்படியாகவும் சில படங்கள் வருகின்றன. அந்த விதத்தில் வந்துள்ள படம்தான் இந்த ‘அரியவன்’.

தனுஷ் நடித்த “யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால், இந்தப் படம் சம்பந்தப்பட்ட எந்த புரமோஷன்களிலும் இயக்குனர் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் இன்று வரை மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கும் படம் என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இஷான், ஒரு கபடி விளையாட்டு வீரர். அவருக்கு பிரனாலி கோக்ரே என்ற காதலி இருக்கிறார். பிரனாலியின் தோழி ஒருவரை அவரது காதலன் ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார். அது பற்றி தெரிய வந்ததும் அந்த காதலனையும், அவனது கும்பலையும் பற்றி விசாரிக்கிறார் இஷான். அவர்களிடமிருந்து மேலும் பல பெண்களின் வீடியோக்களைக் கைப்பற்றுகிறார். அந்த கும்பலின் பின்னணியில் தலைவனாக இருக்கும் டேனியல் பாலாஜி, இஷான் செய்தது பற்றித் தெரிய வர அவரை மிரட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத இஷான், டேனியல் பாலாஜியை எதிர்த்து மற்ற பெண்களையும் காப்பாற்ற நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் அறிமுகக் கதாநாயகனாக இஷான் நடித்துள்ளார். ஆக்ஷனில் அசத்துபவர், ஆக்டிங்கிலும் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். எல்லா காட்சிகளிலும் ஒரே விதமான முகபாவத்தையே வெளிப்படுத்துகிறார். அவரது காதலியாக பிரனாலி கோக்ரே. காதலனுக்கு உதவியாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். பெண்களை வைத்து வீடியோ எடுத்து அதன் மூலம் கோடிகளை சம்பாதிக்கும் வில்லனாக டேனியல் பாலாஜி.

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். அதற்குள்ளாகவே படத்தை சுருக்கமாக முடித்துள்ளார்கள். பெரிய அளவில் எந்தவிதமான திருப்புமுனைகளும் படத்தில் இல்லை. எப்படியும் ஹீரோ, பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை இன்னும் பரபரப்பாகச் சொல்லியிருக்கலாம். கிளைமாக்சில் ஹீரோ களத்தில் இறங்காமல், பாதிக்கப்பட்ட பெண்களை வைத்தே படத்தை முடித்திருப்பது மட்டும் சிறப்பு.

படத்தில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்தான். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ரசிக்கும்படியான படமாக வந்திருக்கலாம். படத்தை யார் இயக்கினாரோ அவர்தான் அதற்கு பொறுப்பு. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

அரியவன் – கொஞ்சம் சிறியவன்…

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...