அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? ; உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு இந்தியா நுழையுமா..?

Date:

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் அவுஸ்ரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியை `சமநிலை’ செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு இந்த டெஸ்டை வெல்வது கட்டாயமாகும்.

தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இலங்கை-நியூசிலாந்து தொடரை பொறுத்து வாய்ப்பு அமையும். அதற்கு இடமளிக்காத வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.

இந்தூர் டெஸ்டில் இந்திய வீரர்களின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அவுஸ்ரேலிய அணி 2 நாள் மற்றும் ஒரு செசனில் இந்தியாவை எளிதில் வீழ்த்தி இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

விக்கெட் காப்பாளர் ஸ்ரீதர் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 வயதான அவர் டெஸ்டில் அறிமுகமாகுகிறார். பரத் கடந்த 3 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இந்த தொடரில் அரைசதம் கூட அடிக்கவில்லை.

இதனால் அவர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ரோகித் சர்மா, அக்ஷர் படேல் மட்டுமே நிலையாக ஆடி வருகிறார்கள். பந்துவீச்சில் ஜடேஜா (21 விக்கெட்), அஸ்வின் (18 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த டெஸ்டில் ஆடாத முகமது ஷமி இடம் பெறுவார். உமேஷ் யாதவ் நீக்கப்படும் வாய்ப்புள்ளது.

அவுஸ்ரேலியா கடந்த போட்டியை போலவே இந்த டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். அணித்தலைவர் கம்மின்ஸ் நான்காவது டெஸ்டிலும் ஆடமாட்டார்.சொந்த பணி காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். இதனால் ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியிலும் அணித்தலைவராக பணியாற்றுவார்.

அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் லபுஷேன் (178 ரன்), உஸ்மான் கவாஜா (153), ஹேண்ட்ஸ் ஹோம் ஆகியோரும், பந்து வீச்சில் நாதன் லயன் (19 விக்கெட்), மர்பி (11), மேத்யூ குன்மேன் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 106-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 105 போட்டியில் இந்தியா 32 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா 44 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 28 போட்டி `டிரா’ ஆனது. ஒரு டெஸ்ட் `டை’ ஆனது. நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“எலெக்ஷன்” படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார்...

குபேரா படத்தில் நாகர்ஜூனா ஃபர்ஸ்ட் லுக் – மாஸ் வீடியோ வெளியீடு

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா....

வெற்றிக்கு ‘தல’ தான் காரணம் – சென்னையை கிண்டல் செய்த பஞ்சாப்!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன்? டுவிஸ்ட் வைத்த ரோகித் சர்மா

டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ந் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய...