டி20 உலகக் கோப்பைக்கான “anthem” வெளியீடு

Date:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

20 அணிகள் பங்கேற்கும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. பங்கேற்கும் நாடுகள் தங்களுடைய அணிகளை அறிவித்து வருகின்றன.

 

இந்த நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான “anthem” இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவுட் ஆஃப் திஸ் வேர்ல்டு (Out Of This World) என்ற தலைப்பில் சீன் பால் மற்றும் கெஸ் பாடியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் என்றாலே கடற்கரைதான். கடற்கரையில்தான் எதிர்கால வீரர்களாக வரவிருக்கும் சிறுவர்கள் விளையாடுவார்கள். அந்த காட்சிகள் இதில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி அடிக்கும் ஷாட், கிறிஸ் கெய்லின் நடனம் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

இந்த anthem 3.09 நிமிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...