இங்கிலாந்து மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா

Date:

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா, அடுத்த மாதம் (மே) 6-ம் திகதி நடைபெற உள்ளது.

தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமுள்ள சுமார் 2,000 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சமையல்கலைஞர் மஞ்சு மாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. சிறப்பான தொண்டு பணிகளுக்காக வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை பெற்றவர் என்கிற முறையில் மஞ்சு மாலிக்கு இந்த கவுரவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை போலவே பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை பெற்ற 800-க்கும் அதிகமான தன்னர்வலர்கள் முடிசூட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான தொண்டு நிறுவனத்தில் சமையல்கலைஞராக பணிபுரிந்து வரும் மஞ்சு மாலி, கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கு செய்த சேவையை பாராட்டி அவருக்கு ராணி 2-ம் எலிசபெத், பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...