இந்தியாவுக்கு 277 ஒட்ட இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Date:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர்.

சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார். இவர் 52 ரன்களில் அவுட் ஆனர். இந்த ஜோடி 2 விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தது. இவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே ஸ்மித் (41) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த லெபுசென் 39 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். 157 ரன்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து கிரீன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். 35.4 ஓவரில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து, மார்னஸ் லாபுஸ்சாக்னே 39 ரன்களும், கேமரூன் கிரீன் 31 ரன்களும், மார்ஸ் ஸ்டாயினிஸ் 29 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், 47.3 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் மாத்யூ ஷார்ட் மற்றும் பாட் கம்மின்ஸ் விளையாடினர். இதில், மாத்யூ ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, களமிறங்கிய சீயான் அபோட்டும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.

சீயானின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய ஆடம் சம்பா 2 ரன்கள் எடுத்து ரன் ஆட்டமிழந்தார். பாட் கம்மின்ஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...