இன்றைய ராசிபலன் 03.05.2023

Date:

மேஷம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சிலர் உங்கள் உதவிகளை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களால் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

ரிஷபம்

பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உங்களின் முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்

இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். நண்பர்களின் திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இன்று உங்களுக்கு லாபம் பெருகும் நாள்.

தனுசு

அனுபவ பூர்வமாக அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நீங்கள் கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

மகரம்

கணவன் – மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள். உடல் நலம் பாதிக்கும். உறவினர்களால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார்.கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...