இன்றைய ராசிபலன் 13.05.2023

Date:

மேஷம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

கடந்த 2 நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்

கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நன்மைகள் பல நடக்கும் நாள்.

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாக அமையும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

துலாம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் விட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணம் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

குடும்பத்தாருடன் கலந்தாலேசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத கவலை வந்து போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சர்ச்சையில் சிக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

எளிதில் முடித்து விடலாம் என்று நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்குஉதவுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20...

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...