இன்றைய ராசிபலன் 24.04.2023

Date:

மேஷம்

உற்சாகமாக எந்தக் காரியத்தையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மாற்றாக வாங்கி இருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல்லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களின் மனசு காயம் படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பணம் இழப்பு வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மிதுனம்

கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். புது ஒப்பந்தம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்

எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்பு காட்டுவார்கள். உங்களால் பயன் பெற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.

கன்னி

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து சொல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வாசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உங்களுக்கு உதவுவார்கள். உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

மகரம்

குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்து சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மீனம்

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களின் உதவியை நாடுவார்கள். உங்களின் செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். உங்களின் துணிச்சல் அதிகரிக்கும் நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...